Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Wednesday, February 8, 2012

பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்று இக்கட்டியை அகற்றுவது தொடர்பில் சிகிச்சை பெற்றார் யுவராஜ். அங்கு பெறப்பட்ட அறிக்கைகளின்படியே யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

யுவராஜ் சிங்கிற்கு சிகிச்சையளித்துவரும் வைத்தியர் ஜதின் சௌத்தரி இது தொடர்பில் குறிப்பிடுகையில்...

”யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இது 100 வீதம் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் என்பது ஆறுதலான விடயம். ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை. முறைப்படி சிகிச்சை பெற்றால் மே மாதத்திலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் யுவராஜினால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும். இது ஓர் அபூர்வமான புற்றுநோய் கட்டி. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதால் இலகுவில் குணப்படுத்திவிடலாம்...” என்று கூறியுள்ளார்.

”நுரையீரலின் மேற் பகுதியில் - இதயத்திற்கு கீழாக இந்த புற்றுநோய் கட்டி காணப்படுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆகையினால் “கீமோ தெரபி“ எனப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் இக்கட்டியை கரைக்க முடியும்.

இந்த புற்றுநோய் கட்டியினை 100 விகிதம் அகற்றிவிட முடியும். அந்த சிகிச்சையினை யுவராஜ் சிங் - மார்ச் மாதத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறது. அப்படி அது சாத்தியப்படுமானால் ஏப்ரல் இறுதியில் யுவராஜ் குணமடைந்துவிடுவார். மே மாதத்திலிருந்து பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...” என்றும் டாக்டர் சௌத்தரி மேலும் கூறியுள்ளார்.

Tuesday, January 24, 2012

தில்ஷான் ராஜினாமா; புதிய தலைவர் மஹேல....!



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் குமார் சங்கக்கார ராஜினாமா செய்ததையடுத்து திலகரட்ன தில்ஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 
எனினும்  இலங்கை அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடன் தோல்விகளைத் தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் துறை முற்றாக மறுசீரமைக்ப்படவுள்ளதாக செய்திகள்வெளியாகியிருந்தன.
அண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா செய்ததையடுத்து மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் தொடர்ந்தும் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
34 வயதான மஹேல ஜயவர்தன,  ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.  
அவர் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பக்கபடுகிறது.
 

Wednesday, January 18, 2012

இலங்கை அணிக்குள் இரண்டு பிரிவுகளா...?

தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயற்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அணியின் மூன்று சிரேஷ்ட வீர்ர்களின் தலைமையில் சில வீரர்களும் அணித் தலைவர் தலைமையில் இன்னும் சில வீர்ர்களுமாகச் சேர்ந்து இரு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட வீர்ர்களின் தலைமையிலான அணியே பலம் பொருந்திக் காணப்படுகிறது என்றும் அந்த்த் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இதேவேளை, தென்னாபிரிக்க கிரிக்கட் போட்டிகள் முடிந்து ஒரு வாரகாலத்துக்குள் அனைத்து வீர்ர்களையும் நாடு திரும்புவற்கு ஏற்பாடு செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கிரிக்கட் சபையின் தலைவர் உபாலி தர்மதாசவுக்கு உத்தரவிட்டுள்ளார்.