Friday, September 11, 2020

என்றாவது ஒருநாள் விளக்கின் சுவாலையை கவனித்திருக்கிறீர்களா!

 என்றாவது ஒருநாள் விளக்கின் சுவாலையை கவனித்திருக்கிறீர்களா!

அது எந்த கவலையும் இன்றி தன் உயிரை மாய்த்து கொண்டிருக்கிறது.
அதனுடன் மிகச்சிறிய மென் காற்றெயேனும் யாரும் நெருங்க விடுவதில்லை. காற்றாலோ நெருங்காமல் இருக்க முடிவதில்லை.
இத்தனைக்கும் மத்தியில் முன் தீயாக இருந்து தன்னை தானே சாந்தபடுத்தி சுவாலையாக மாரி தன் மரணத்தை நேசித்து கொண்டிருகிறது. மரணமோ சுவாலையின் உயிரை எடுத்துகொண்டிருக்கிறது.
மென் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. சுவாலையை நெருங்கிறது.
தீச்சுடர் இறக்கிறது...!! இது தினம் நிகழ்கிறது....!!!

Friday, June 9, 2017

இந்த பொருளாதார தடையெல்லாம் கட்டாருக்கு ஒரு மேட்டரே இல்லங்கன்னு ஒரு குரூப்பும், இதட்கு பின் காட்டரும் சிரியா, ஈராக், லிபியா மாதிரி போய்விடும்னு இன்னொரு குரூப்பும் காரசாரமான விவாதம்.....

The Ten Commands
இந்த பொருளாதார தடையெல்லாம் கட்டாருக்கு ஒரு மேட்டரே இல்லங்கன்னு ஒரு குரூப்பும், இதட்கு பின் காட்டரும் சிரியா, ஈராக், லிபியா மாதிரி போய்விடும்னு இன்னொரு குரூப்பும் காரசாரமான விவாதம் முகநூலில் வலம் வரும் வேலையில்....
தனது மொத்த வருமானத்தில் 2 மடங்கு பணத்தை FIFA க்கு அள்ளிக்கொட்டிவிட்டு எழவு காத்த கிளி போல இருக்கும் இந்நிலையில்.
இன்னும் தனது செலவுகளை சிக்கனப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
கட்டார் வாழ் மக்களின் உணவுத்தேவையில் 40% சவூதியிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தடை விதித்த அடுத்த கனமே 12 மணி நேரங்களுக்குள் கப்பலில் உணவு அனுப்பி ஈரான் கைகொடுத்து நிட்கிறது.
2014 இல் ஏற்பட்ட அரபுலக முருகல்களை கச்சிதமாய் தீர்த்து வைக்க பெரும் பங்காற்றிய குவைத் அமீர் இம்முறையும் களத்தில் குதிக்க சவூதி 10 கட்டளைகளை இட்டுள்ளது.
குறிப்பாக அல்ஜஷீரா செய்தி சேவையை முடக்குமாறும் ,
இஸ்லாமியர்களின் மூன்றாவது மிக முக்கியமான வணக்கஸ்தலத்தை மீட்டெடுக்க போராடும் ஹமாஸ் உடனான சகல தொடர்ப்பையும் துண்டிக்கவும் கேட்டுள்ளது.
கட்டாரின் அரசு குடும்பதை சேர்ந்த ஒருவர் அல்-கைதா மூலம் கடத்தப்பட்டு ஒரு பாரிய தொகை பணம் கொடுத்து மீட்கப்பட்டார் என்பது மேலதிக செய்தி.
ஈராக் யுத்தம் முதல் ரோகிங்ய முஸ்லிம்கள் வரை குரல் கொடுக்கும் ஒரே ஊடகமாக அல்ஜஷீரா திகழ்கிறது .
சிறிது காலத்திட்க்கு முன் UAE யின் அமைச்சர் ஒருவரின் ஈமெயில் ஊடுறுவப்பட்டு அவரை மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தியது. இவ்வாறான செயல்கள் அடிமனதில் இருந்து இன்று தான் வெளி வந்துள்ளது.
சவூதி விதித்துள்ள அந்த 10 கட்டளைகளை கட்டார் நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறியே? 
பி.கு.
சவூதிக்காரங்களுக்கு football பார்க்காமல் இருக்க முடியாது எப்படியும் ஆகக்கூடிய அதிக பட்சம் 2022 க்கு மேல் இந்த கெடுபிடி தாக்கு பிடிக்காது என்பது எனது கணிப்பு...
யார் கண்டா இன்னும் ஓரிரு நாட்களில் கூட...

Monday, May 22, 2017

Sunday, January 22, 2017

விண்வெளி ஆய்வு மையம் (ISS - Internatioanl Space Station)

வானில் மிகவும் பிரகாசமான பொருட்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது தான் இந்த விண்வெளி ஆய்வு மையம் (ISS - Internatioanl Space Station).

இன்று பி.ப. 6.39 மணியளவில் இது இலங்கையை ஊடுருத்து சென்றது. ISS ,Tiangong 1,Tiangong 2 ஆகிய மூன்று Space Station களில் ISS தான் மிக பெரியது இது அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான்,கனடா, ஐரோப்பிய ஒன்றிய(22 நாடுகள்) நாடுகளின் கூட்டு முயற்சியாகும். இது நாசாவுக்கும் அமெரிகவுக்கும் தனியே சொந்தமானது இல்லை.

இது 72m நீளமும், 108m அகலமும், 20m உயரமும், 419,455 kg நிறையும் கொண்டது. ஆகவே, இது சாதாரண வெற்றுகண்ணனுக்கு தெளிவாக தெரியக்கூடியது. இது மணிக்கு சுமார் 27,600km வேகத்தில் பயணிக்கும் அதாவது இலங்கையை 29 செகண்ட்களில் குறுக்காக கடந்து செல்லும். தொலைநோக்கியில் பார்ப்பது பொருத்தமற்றது.
1998.11.20 விண்ணுக்கு ஏவப்பட்டு இதுவரை 101,081 தடவை பூமியை சுற்றி வந்துள்ளது. ஒரு நாளைக்கு 15.54 தடவை சுற்றும்.



இன்று இதை பார்க்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம்.. செப்டெம்பர் 27,28,29,30 தினங்களில் மீண்டும் தென்படும். இதை உங்களது பிரதேசத்தில் காண்பதற்கு https://spotthestation.nasa.gov/home.cfm என்ற இணையத்தில் மூலம் நேரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி விண்வெளியிலிருந்து நேரடியகாக பூமிய இந்த ISS மூலம் பார்க்கலாம்.. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இலங்கைக்கு நேராக வரும் சந்தர்பத்தில் LIVE ஆக பாருங்கள் அருமையாக இருக்கும்..!!

இதான் லிங்க்..
https://www.youtube.com/watch?v=Gy5PC5Auoak

இதுவும் ஒரு நேரடி ஒளிபரப்பு..

J. மபாஸ் தீன்

Friday, January 13, 2017

மபாஸ் தீனின் பயணக்குறிப்பிலிருந்து... பாகம் 01

Deduru Oya
பேரூந்து ஓட்டுனர்களுக்கு தனது திறமையைகாட்ட ஏதாவது ஓர் இடத்தில் சந்தர்பம் கிடைத்துவிடும். புத்தளம் - சிலாபம் வீதி இதற்கு அதிக ஒத்துழைப்பும் கொடுக்கின்றது.

A9 வீதியின் சகோதரன் என்றுகூட இந்த வீதியை கூறிவிடலாம் ஏனெனில் அத்தனை உயிர்களை காவுகொண்டும் அமைதியாக இருக்கிறது.
வீதியின் இரு ஓரங்களிலும் பசுமையான மரங்களை கொண்டு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிந்தாலும் வேகத்தை குறைக்கும் படி கூறும் பதாகைகளும் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின் எச்சமும் இது ஒரு உயிர்கவ்வும் கருவி என்பதை நிரூபித்து விடுகிறது..

50km தூரத்தை கொண்ட இவ்வீதியில் 50kmh வேகத்தில் செல்லுமாறு போக்குவரத்து அதிகார சபையால் பரிந்துரைக்கபாட்டாலும். 25 தொடக்கம் 35 நிமிடங்களில் கடந்து செல்கின்றனர். இதில் ஒரே இடத்திற்கு செல்லும் வேற வேற பஸ்களை சந்தித்து கொண்டால் அவ்வளவுதான் யார் முதலில் செல்வது என்ற போட்டி.

மீசைகள் எல்லாரும் பாரதியாக முடியாதல்லவா.. 120kmh வேகத்தில் திறமையான ஓட்டுனர்கள் தப்பித்து கொள்ள மீதி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கிக்கொல்கின்றனர்.

அதிக மழை காலங்களில் தெதுறு ஓயா பெருக்கெடுத்து இவ்வீதி சுமார் 12km நீரில் மூழ்கிவிடும். ஏனைய வாகனங்கள் மட்டுப்படுத்தபட்டு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கபடும்.

பஸ்ஸில் நமது கால் நனையும் அளவு நீர் இருந்தாலும் வேற்றுபாதையில்லாமல் நிர்பந்திக்கப்படுகிறது. செல்லும் போது கடலில் செல்வது போன்ற அனுபவம் ஏற்பட்டாலும் பஸ் நிருத்தபட்டால் நாம் இறங்கி தள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் நாம் இறங்கினால் நீரின் வேகம் நம்மை இழுத்துக்கொண்டுசென்றுவிடும். நீரோட்டம் குறையமட்டும் அங்கேயே இருக்கவேண்டும்.

Thursday, November 10, 2016

பான் ஒன்றின் விலை 10 மில்லியன் சிம்பாபே டொலர். (பணவீக்கம்) அனைவரும் படிக்க வேண்டிய பதிவு


சிம்பாபே நாட்டில் பான் ஒன்றின் விலை 10 மில்லியன் சிம்பாபே டொலருக்கு விற்கப்பட்டது..
பணவீக்கத்தின் உச்சகட்டத்தை அடைந்த நாடுகளில் சிம்பாபேயும் ஒன்று. பொதுவாக பணவீக்கம் 3%-15% இல் இருக்கும்.
சிறியளவிலான பணவீக்கம் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை உண்டு பண்ணும்.
இலங்கைyயின் ப.வீ. 4.20%,
இந்தியா 5.17% .
2008 இல் சிம்பாபே பணவீக்கம் 79,600,000,000%.
ப.வீ. அதிகரிக்க பணத்தின் பெறுமதி குறையும். இந்நிலையிலே 2008,2009
ஆண்டுகளில் சிம்பாபேயின் அரச கடன் காரணமாக அரசுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டது இதற்கு அதிகமான பணங்களை அச்சடிக்க தொடங்கியது. விளைவு என்னவென்றால் எல்லாரின் கையிலும் அதிகமான பணம் புழங்க ஆரம்பித்து விட்டது.
பொருட்களுக்கு தட்டுப்பாடு இதனால் விலை அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் பாண் ஒன்றின் விலை 10 மில்லியன் சிம்பாபே டொலராக இருந்தது.
ஒரு பாண் வாங்க செல்ல இவ்ளோ பணத்தை டேக்டரிலா கொண்டு போவது என்று உங்களது மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது..
நமது அரசு 5000 தாள் அடித்தது போல் சிம்பாபே அரசும் 100,000 தாள், 10,00,000 தாளில் ஆரம்பித்து நூறு ட்ரில்லியன் பெறுமதியான தாள் வரை அடித்தது.

இறுதியில் தனது சிம்பாபே டொலரை பெறுமதி இழக்க செய்து,அது இனி செல்லாது என அறிவித்து அமெரிக்கா டொலருக்கு மாறியது..!!
சிறியளவிலான பணவீக்கம் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை உண்டு பண்ணும்.
பெரிய அளவிலான பணவீக்கம் நாட்டை நாசமாக்கி விடும்.
ஜ .மபாஸ் தீன்

Thursday, March 17, 2016

2002 ஆம் ஆண்டு தொடகத்தில் வெளியிட்ட செய்திகள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. - இதற்கு புளிட்ஷேர் விருதும் கிடைத்தது...!!



'The Boston Globe' - 1872 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை இடைவிடாது இயங்கிகொண்டிருக்கும் செய்தித்தாள் நிறுவனம். நாளிதழ் மட்டுமல்லாமல், இணையத்திலும் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது பாஸ்டன் குளோப். இவர்களது புலனாய்வித் துறையான 'Spotlight' குழுவினர், 2002 ஆம் ஆண்டு தொடகத்தில் வெளியிட்ட செய்திகள் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. காரணம் அந்தச் செய்திகளில் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் கதொலிக்கப் பாதிரியார்கள். அவர்கள் செய்ததாக, தொடர்ந்து செய்து வருவதாகச் சொல்லப்பட்ட குற்றம் - சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமை. பத்திரிக்கைத்துறையில் உயர்ந்து விருதாகக் கருதப்படும் 'The Pulitser Prize for Public Service' விருது Boston Globe இன் Spotlight பிரிவிற்கு, அவர்களது இந்த 'Sexual Abuse Scandal in the Catholic archiocese of Boston' செய்தித் தொடருக்காக வழங்கப்பட்டது.


Investigative Journalism - இதைக் கேட்டாலே நம்முள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது நிஜம். ஆனால் இதிலுள்ள ஆபத்துகள் ஏராளம். மூன்று மாநிலப் போலீஸார் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த வீரப்பனை பேட்டி கண்டதோடு மட்டுமல்லாமல், அவரது சமீபத்திய புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார் ஒரு பத்திரிக்கையாளர். சாதாரண ஆட்களால் இது முடியுமா? அதிகாரம் நியமித்த 'அதிகாரிகள்' ஒரு கேஸை விசாரணை செய்வதற்கும், சாமினயரான ஒரு பத்திரிக்கையாளர் ஒரு கேஸை விசாரிப்பதற்கும் இருக்கும் வேறுபாடுகளை உணர்ந்தாலே இதில் இருக்கும் ரிஸ்க் தெரிந்துவிடும். கரணம் தப்பினால் மரணம். 'கழுகு', 'பருந்து', 'கருப்புப்பூனை' என்று எந்தப் பெயரில் மறைந்து எழுதினாலும், 'ஜிகர்தண்டா' சேதுவைப் போன்றவர்கள் தேடிக்கண்டுபிடித்துக் கொளுத்திவிடுவார்கள். ஆனால் இதெல்லாம் பழைய கதை. எனக்குத் தெரிந்து சமீபகாலத்தில் தீவிரமாக இந்தத் தளத்தில் இயங்கும் பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தில் வெகு சொற்பமே. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். இணையத்தில் 'சவுக்கு' என்ற வலைபக்கத்தில் சில முக்கிய சமாச்சாரங்களை முடிந்தவரை ஆதாரத்தோடு எழுதுகிறார்கள். எத்தனை பேர் அவர்களது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெகுஜன புலனாய்வுப் பத்திரிக்கைகளான நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் தங்களுக்கான மதிப்பை இழந்து பல வருடங்களாகின்றன. '100 கோடி கைமாறியதாம்', '1000 கோடிக்கு ஏலம் போனதாம்' என்று பொத்தாம் பொதுவாகவே கொளுத்திப்போட்டுவருகிறார்கள். ஆதாரத்துடன் எதையுமே கொடுப்பதில்லை. நக்கீரனுக்கு ஆளுங்கட்சி மேல் இருக்கும் வெறுப்பும், தினமணிக்கு தி.மு.க மேலிருக்கும் வெறுப்பும் ஊரறிந்தது. விகடன் அவ்வபோது செம்மையான தகவல்களை புட்டு புட்டு வைக்கிறது. ஆனால் அவையெல்லாம் புலனாய்வு செய்யப்பட்டு ரகசியமாகச் சேகரிக்கப்பட்டவை அல்ல. தொகுத்துச் சொல்லப்பட்டவை. பத்திரிக்கைகளின் இந்த அவலநிலைக்கு அரசியல் காரணங்கள், அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் தாண்டி டி.வி சேனல்களின் வருகையும் பிரதானமாகச் சொல்லப்பட்டாலும், ரிஸ்க் எடுத்து மக்களுக்கு உண்மையைச் சொல்ல இப்போதுள்ள பத்திரிக்கைகளும் மெனக்கெடுவதில்லை என்பது தான் உண்மை. கருத்துக்கணிப்பு போட்டதற்கே ஆபீஸைக்கொளுத்தினால் அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்.

மக்களும் - சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேதிர சரஸ்வதி கைது செய்யப்பட்டாலும் உண்மையில் நடந்தது என்ன? ஆடிட்டர் ரமேஷ் விஷயத்தில் நடந்தது என்ன? டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தொடங்கி ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து தூக்குமாட்டிக்கொள்வது ஏன்? திவ்யாவின் காதலன் இளவரசன் உண்மையில் தற்கொலை தான் செய்து கொண்டானா? நடிரோட்டில் வைத்து சங்கரை வெட்டியவர்கள் பின்னால் இருப்பது வெறும் ஜாதி வெறி மட்டும் தானா அல்லது ‘நீ வெட்ரா நான் இருக்கேன் உனக்கு’ என்று அந்த வெறிக்குத் தீனி போடும் அரசியல் கட்சிகளா? தினம் ஒரு ஆடியோ, அவ்வபோது வீடியோ அனுப்பிக்கொண்டிருந்த கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி முறுக்குமீசை யுவராஜ் தாடிவளர்த்து தானாக முன் வந்து சரணடைவது வரை போலீஸார் ஏன் காத்திருந்தனர்? விழுப்புரம் கல்லூரிப்பெண்கள் மூவர் பிணமாக மிதந்ததன் பின்னணி என்ன? அந்தப் பிரச்சனை முடிவதற்குள் சாய்ராம் காலேஜில் ஒரு மாணவன் பிணமாக மிதக்கிறான். என்னதான் நடக்கிறது நம் ஊர் கல்லூரிகளில்? இந்த சாவுகளுக்கு யார் பொறுப்பு? அணு உலை, மீத்தேன், கெயில் குழாய் என்று மற்ற மாவட்டங்களில் எல்லாம் விரட்டியடிக்கப்படும் 'ப்ராஜெக்ட்'கள் வரிசையாக தமிழகத்திற்கு வருவதன் பின்னால் எத்தனை கோடி மோசடி உள்ளது? எத்தனை முறை என்ற கணக்கே மறந்துவிட்டது அத்தனை முறை தமிழக அமைச்சரவை மாறிக்கொண்டே இருப்பதன் பின்னணி என்ன? - இது எதையுமே நாமும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. நாம் விரும்பும் அதிகபட்ச புலணாய்வுச் செய்தி, சிம்பு யாருடன் சேர்ந்து பீப் பாடல் எழுதினார், விஜய்காந்த் அடுத்து யாரை நாக்கைத் துறுத்தி அடித்தார், நம்பர் நடிகை வீட்டில் இருந்து வெளிவந்த வளர்ந்த மனிதர் யார் - அவ்வளவு தான்.


சிறுவர்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்கொடுமை இல்லாத இடமில்லை. பொதுமக்களிடம் வசமாக மாட்டி செம்ம அடிவாங்கிய 'ஆசிரியர்கள்' இங்கு எத்தனையோ பேர் இங்கு உண்டு. ஆனால் பாதிரியார்கள் என்பவர்கள் இந்தப் படத்தில் சொல்லப்படுவது போல - கடவுளுக்கு நெருக்கமானவர்கள். அனைத்தையும் இழந்தவர்கள் கடவுளே கதி என்று வந்து நிற்கும் போது, அவர்களுக்கு கடவுளாக, கடவுள் அனுப்பிய தூதுவனாகத் தெரிபவர்கள் இவர்களே. அமெரிக்க என்றல்ல, நம் தமிழகத்திலும் கூட எத்தனையோ பாதிரியார்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி. 'மதம்' என்ற சட்டத்திற்குள் இந்தப் பிரச்சனையை சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. 'இந்து' பூசாரிகள் கற்பகிரகத்திற்குள் செய்த லீலைகளையும் இலங்கை புத்தமதப்பிச்சுக்கள் தமிழர்கள் மீது ஏவிய வன்முறை பற்றியெல்லாம் கேள்விப்படும்பொழுது எப்படி அப்படிச் சொல்ல முடியும்.
நன்றி-- பேபி  ஆனந்தன்...