Thursday, February 9, 2012

Journey 2 -The mysterious island...!


Get set for a thrilling journey :

Journey 2 -The mysterious island is an action-adventure film directed by Brad Peyton and is the sequel to the 2008 film Journey to the Center of the Earth.

The film is set for a worldwide release on Feb 10th,2012..The new 3D family adventure begins when Sean Anderson(John Hutcheson) receives a coded distress signal from a mysterious signal where no island should exist..

The film also casts Dwayne Johnson, Michael Caine, Vanessa Hudgens among others..

The film which is a newline cinema presentation of a contrafilm production will be distributed by Warner Bros pictures.In tamilnadu, the film is released by Alagar films.

4000 வருடங்களின் பின்னர் உயிருடன் வந்ததா...?

4000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட விலங்கு  இனம் ஒன்று இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயமானது நிகழ்ந்துள்ளது.
இது mammoths என்று அழைக்கப்படும் யானை போன்ற வடிவம் கொண்ட ஒரு விலங்காகும்.
சைபீரியாவின் பனி படர்ந்த ஆற்றைக் கடந்து போகையில் தான் மேற்படி  எடுக்கப்பட்டுள்ளது.
சைபீரியாவின் Chukotka Autonomous Okrug பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட யானது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
குறித்த பிரதேசம் இதுவரை மனிதர்களின் காலடித்தடம் படாத இடமாகவும் இருந்துள்ளது.


இது உண்மையானது என்பதற்கு இந்த ஒரு  காணொளி மட்டுமே இருப்பதால் இதை நம்ப பலர் மறுக்கின்றனர். இன்றைய  காலத்தில் இவ்வாறான காணொளிகலை Graphicks  மூலம்  இலகுவாக செய்ய  முடியும்  என்பதும் குறிப்பிடத்தக்கது...!

Wednesday, February 8, 2012

பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்று இக்கட்டியை அகற்றுவது தொடர்பில் சிகிச்சை பெற்றார் யுவராஜ். அங்கு பெறப்பட்ட அறிக்கைகளின்படியே யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

யுவராஜ் சிங்கிற்கு சிகிச்சையளித்துவரும் வைத்தியர் ஜதின் சௌத்தரி இது தொடர்பில் குறிப்பிடுகையில்...

”யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இது 100 வீதம் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் என்பது ஆறுதலான விடயம். ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை. முறைப்படி சிகிச்சை பெற்றால் மே மாதத்திலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் யுவராஜினால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும். இது ஓர் அபூர்வமான புற்றுநோய் கட்டி. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதால் இலகுவில் குணப்படுத்திவிடலாம்...” என்று கூறியுள்ளார்.

”நுரையீரலின் மேற் பகுதியில் - இதயத்திற்கு கீழாக இந்த புற்றுநோய் கட்டி காணப்படுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆகையினால் “கீமோ தெரபி“ எனப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் இக்கட்டியை கரைக்க முடியும்.

இந்த புற்றுநோய் கட்டியினை 100 விகிதம் அகற்றிவிட முடியும். அந்த சிகிச்சையினை யுவராஜ் சிங் - மார்ச் மாதத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறது. அப்படி அது சாத்தியப்படுமானால் ஏப்ரல் இறுதியில் யுவராஜ் குணமடைந்துவிடுவார். மே மாதத்திலிருந்து பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...” என்றும் டாக்டர் சௌத்தரி மேலும் கூறியுள்ளார்.