Thursday, February 9, 2012

Journey 2 -The mysterious island...!


Get set for a thrilling journey :

Journey 2 -The mysterious island is an action-adventure film directed by Brad Peyton and is the sequel to the 2008 film Journey to the Center of the Earth.

The film is set for a worldwide release on Feb 10th,2012..The new 3D family adventure begins when Sean Anderson(John Hutcheson) receives a coded distress signal from a mysterious signal where no island should exist..

The film also casts Dwayne Johnson, Michael Caine, Vanessa Hudgens among others..

The film which is a newline cinema presentation of a contrafilm production will be distributed by Warner Bros pictures.In tamilnadu, the film is released by Alagar films.

4000 வருடங்களின் பின்னர் உயிருடன் வந்ததா...?

4000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட விலங்கு  இனம் ஒன்று இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயமானது நிகழ்ந்துள்ளது.
இது mammoths என்று அழைக்கப்படும் யானை போன்ற வடிவம் கொண்ட ஒரு விலங்காகும்.
சைபீரியாவின் பனி படர்ந்த ஆற்றைக் கடந்து போகையில் தான் மேற்படி  எடுக்கப்பட்டுள்ளது.
சைபீரியாவின் Chukotka Autonomous Okrug பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட யானது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
குறித்த பிரதேசம் இதுவரை மனிதர்களின் காலடித்தடம் படாத இடமாகவும் இருந்துள்ளது.


இது உண்மையானது என்பதற்கு இந்த ஒரு  காணொளி மட்டுமே இருப்பதால் இதை நம்ப பலர் மறுக்கின்றனர். இன்றைய  காலத்தில் இவ்வாறான காணொளிகலை Graphicks  மூலம்  இலகுவாக செய்ய  முடியும்  என்பதும் குறிப்பிடத்தக்கது...!

Wednesday, February 8, 2012

பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்று இக்கட்டியை அகற்றுவது தொடர்பில் சிகிச்சை பெற்றார் யுவராஜ். அங்கு பெறப்பட்ட அறிக்கைகளின்படியே யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

யுவராஜ் சிங்கிற்கு சிகிச்சையளித்துவரும் வைத்தியர் ஜதின் சௌத்தரி இது தொடர்பில் குறிப்பிடுகையில்...

”யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இது 100 வீதம் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் என்பது ஆறுதலான விடயம். ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை. முறைப்படி சிகிச்சை பெற்றால் மே மாதத்திலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் யுவராஜினால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும். இது ஓர் அபூர்வமான புற்றுநோய் கட்டி. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதால் இலகுவில் குணப்படுத்திவிடலாம்...” என்று கூறியுள்ளார்.

”நுரையீரலின் மேற் பகுதியில் - இதயத்திற்கு கீழாக இந்த புற்றுநோய் கட்டி காணப்படுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆகையினால் “கீமோ தெரபி“ எனப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் இக்கட்டியை கரைக்க முடியும்.

இந்த புற்றுநோய் கட்டியினை 100 விகிதம் அகற்றிவிட முடியும். அந்த சிகிச்சையினை யுவராஜ் சிங் - மார்ச் மாதத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறது. அப்படி அது சாத்தியப்படுமானால் ஏப்ரல் இறுதியில் யுவராஜ் குணமடைந்துவிடுவார். மே மாதத்திலிருந்து பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...” என்றும் டாக்டர் சௌத்தரி மேலும் கூறியுள்ளார்.

Tuesday, January 24, 2012

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....!



நாம் அன்றாடம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு இன்னமும் கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களில் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை மற்றவரிடம் போய் கேட்பது நமக்கே கஷ்டமான விசயம். ஏனென்றால் ஒருவரிடம் இதை போய் கேட்டால் இவ்வளவு நாளாக நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் உங்களுக்கு இது கூட தெரியாத என அவர் கேட்டுவிடுவாரே என்றுதான்.....

சரி... இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்...

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்கள் உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை எதுவானாலும் சரி இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்துகொள்வோம்..

1



ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரின் மாடல் நம்பர் என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே கம்ப்யூட்டருக்கு சென்று CPU ஐ சுற்றி சுற்றி பார்த்துவிட்டு மாடல் நம்பர் எங்கே இருக்கிறது என தெரியாமல் யோசிக்க வேண்டாம்

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu ஐ கிளிக் செய்து Run என்ற இடத்தில் msinfo32.exe என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் மாடல், கம்ப்யூட்டர் உருவாக்கிய நாள் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.....


2

உங்கள் கம்ப்யூட்டரில் 1GB ராம் பொருத்தப்பட்டுள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். அதோடு இன்னொரு 1GB ராம் பொருத்த வேண்டும் என உங்களுக்கு ஒரு ஆசை உள்ளது. உடனே கம்ப்யூட்டர் கடைக்கு சென்று நீங்கள் என் கம்ப்யூட்டருக்கு 1GB ராம் பொருத்த வேண்டும் அதன் விலை என்ன என்று கேட்பீர்கள். அவர் உங்களிடம் ராம் SDRAM, DDR1, DDR2, DDR3 இதில் எந்த வகை ராம் உங்களுக்கு வேண்டும் என கேட்பார். அதை உங்கள் கம்ப்யூட்டரில் எப்படி பார்ப்பது என்று உங்களுக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா....

இண்டெர் நெட்டில் இலவசமாக உள்ள இந்த CPUZ என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்.


இன்ஸ்டால் செய்த பிறகு இதனை ஓப்பன் செய்து Memory என்ற தலைப்பை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது எந்த வகை ராம் என தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.


3





உங்களிடம் இரண்டு போட்டோ இருக்கிறது. அது இரண்டையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுத்தால் பேப்பர் மிச்சம் ஆகும். ஆனால் அது எப்படி என்று நமக்கு தெரியவில்லையே என்று கவலையா ? அல்லது அப்படி எடுப்பதற்கு தனியாக ஒரு மென்பொருள் வேண்டுமே என்று இது நாள் வரை நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்கள் போட்டோவை ஓப்பன் செய்வதற்கு முன்பாக அந்த போட்டோ ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Windows Picture and Fax Viewer என்பதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் போட்டோ Picture and Fax Viewer மூலம் ஓப்பன் ஆகும். அந்த போட்டோவின் கீழ் Print என்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்கலாம். அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.

 

அடுத்து வரும் தட்டில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோவை டிக் செய்துகொள்ளுங்கள்.


அடுத்து Next ஐ அழுத்துங்கள்.



அடுத்தும் Next  ஐ அழுத்துங்கள்.


அடுத்து வரும் இந்த தட்டில் இடது பக்கம் உள்ள Available Layout என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோ உள்ள Layout ஐ தேர்ந்தெடுங்கள்.



அடுத்து Next  .......... Next ஐ அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு இரண்டு போட்டோ ஒரே பேப்பரில் பிரிண்ட் ஆகி வெளியே வரும். இதே முறையில் நான்கு போட்டோ மற்றும் ஒன்பது போட்டோ ஒரே பக்கத்தில் பிரிண்ட் எடுக்கும் Layout ஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.






உங்கள் கீபோர்டில் ஏற்படும் திடீர் பிரச்சனையின் காரணமாக சில பட்டன்கள் வேலை செய்யாமல் போகலாம்.  அதனால் ஒரு சில எழுத்துக்களை மட்டும் நாம் கீ போர்டு மூலம் டைப் செய்ய முடியாமல்  சிரமப்படுவோம். அப்படிப்பட்ட  நேரத்தில் கம்ப்யூட்டரில்  ஸ்கிரீன்  கீபோர்டு இருந்தால்  வசதியாக  இருக்குமே என நாம்  நினைப்போம். அதற்கு தனியாக ஏதாவது ஒரு  மென்பொருள் இருக்கிறதா என இணைய  தளத்தில்  தேடிக்கொண்டிருப்போம்.  ஆனால்  விண்டோஸ்  புரோகிராமில் எப்பொழுதும் ஒரு  ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு உள்ளது என்று  நான் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு  சந்தோசமாக இருக்கும். ஆம்.  நீங்கள் Start மெனுவை  ஓப்பன் செய்து Run என்ற  பட்டனை  கிளிக்  செய்து அதில்  OSK  என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே உங்களுக்கு ஒரு ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு  கிடைத்துவிடும். அதன் மூலம்  நீங்கள்  எளிதாக அவசர தேவைகளுக்கு டைப் செய்துகொள்ளலாம்.


5







உங்கள் கம்ப்யூட்டர் திரையை காப்பி எடுக்க தனியாக ஒரு மென்பொருள்தான் வேண்டும் என்று நீங்கள் இதுநாள் வரை நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.  ஏனென்றால்  உங்கள் கம்ப்யூட்டர் திரையை நீங்கள் நினைத்த நேரத்தில் காப்பி எழுத்து அதை சேமித்துக்கொள்ள உங்கள் கீ போர்டில் Prt scr என்ற ஒரு பட்டன் உள்ளது.

இந்த பட்டனை அழுத்தி  நீங்கள்  கம்ப்யூட்டர்  திரையை  காப்பி எடுத்ததும்  Clipboard Copy   அதாவது  கம்ப்யூட்டர்  மெமரியில்  காப்பி  ஆகிக்கொள்ளும்.  பிறகு நீங்கள் Paint Brush அல்லது Word, Excel  போன்ற  ஏதாவது  மென் பொருளை  ஓப்பன்  செய்துகொண்டு  அதில்  Past  பட்டனை அழுத்தினால்  நீங்கள் காப்பி செய்த ஸ்கிரீன் அங்கு வந்துவிடும்.

தில்ஷான் ராஜினாமா; புதிய தலைவர் மஹேல....!



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் குமார் சங்கக்கார ராஜினாமா செய்ததையடுத்து திலகரட்ன தில்ஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 
எனினும்  இலங்கை அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடன் தோல்விகளைத் தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் துறை முற்றாக மறுசீரமைக்ப்படவுள்ளதாக செய்திகள்வெளியாகியிருந்தன.
அண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா செய்ததையடுத்து மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் தொடர்ந்தும் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
34 வயதான மஹேல ஜயவர்தன,  ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.  
அவர் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பக்கபடுகிறது.
 

Monday, January 23, 2012

கூகுள் தேடுபொறியில் இனி எல்லாமே கிடைக்கும் : புதிய வசதி அறிமுகம்



கடந்த வருடம் பேஸ்புக் சேவையை போன்று, கூகுள் பிளஸை அறிமுகப்படுத்திய கூகுல் நிறுவனம், தற்போது Search, Plus your World எனும் இச்சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது.

நீங்கள் கூகுள் பிளஸில் சேகரிக்கும் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், தரவுகள் என்பவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் கூகுள் தளத்தின் பிரதான தேடுபொறியுடன் இனி இணைத்து கொள்ள முடியும். இதன் மூலம், உங்களை பற்றி அறியாத மூன்றாவது நபர் ஒருவர் உங்களுடன் நண்பர் ஆகமலே நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொது விஷயமொன்றை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்கிறது கூகுள்.

 http://www.youtube.com/watch?v=8Z9TTBxarbs&feature=player_embedded

YouTube ல் திரைப்படங்களை பார்த்து மகிழலாம்...!


காணொளி  இயங்குதளமான Youtube 'ல் நாம் எடுத்த விடியோவை  அப்லோட் செய்து எமது நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். இப்பொழுது  இந்த தளத்தில்  400க்கும் அதிகமான திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் , தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைய பல திரைப்படங்களை YouTube ல் ஓட்டும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்த லின்க்குகளை சொடுக்குவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.