Sunday, January 15, 2012

குட்டிகள் புரியும் சாகசத்திற்கு அளவே இல்லை...!

இன்றைய காலகட்டத்தில் குட்டிகள் புரியும் சாகசத்திற்கு அளவே இல்லை. இப்போதேல்லாம் குறைந்த வயதிலே அறிவின் தேடல், விவேகம் எனபன வளர்ச்சியடைந்து செல்லும் காலம்.

பெயர்வர்களுக்கு ஈடுசெய்யும் அளவுக்கு சில குழந்தைகளின் ஆற்றல் பிரமிக்க வைக்கும்.

அந்தவகையில் ஒரு குட்டி ஒன்று ஆடும் பிறேக் டான்ஸ்சை ( Break dance) பாருங்கள். எமக்கு ஆட தோன்றும்.உலகிலேயே இவர் மிகவும் குறைந்த வயதில் பிறேக் டான்ஸ் ஆடும் குட்டி குழந்தையாக இருப்பாரோ!!!

http://www.youtube.com/watch?v=Aus7I7MhaOM&feature=player_embedded

புதிதாக பேஸ்புக்!: பெரும் ஆபத்தும் காத்திருக்கின்றது-அதிர்ச்சி செய்தி (வீடியோ இணைப்பு)

பேஸ்புக் சமூகவலையமைப்பின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் பூராகவும் சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை இது கொண்டுள்ளது.

இச் சமூக வலையமைப்பின் செல்வாக்கினை வியாபார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. எனவே தான் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதில் தங்களுக்கென ஒரு பக்கத்தினைப் பேணுவதிலும் ஆர்வம் காட்டுகின்றன.

குறிப்பாக சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளிலும் பேஸ்புக் பாவனையை இணைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளன.

கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் கணனிகளில் பேஸ்புக்கினை இலகுவாகப் பயன்படுத்தக்கூடியவாறு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சடிஸ் - பென்ஸ் தனது புதிய கார் மொடல்களில் பேஸ்புக்கினை இலகுவாக உபயோகிக்கும் வகையில் புதிய பேஸ்புக் அப்ளிகேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதற்கென அதி நவீன தொழில்நுட்பத்தில் 'mBrace2' என்ற அமைப்பொன்றும் மெர்சடிஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2xeUuSlC1ok


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2xeUuSlC1ok


திரையுடன் கூடிய இவ்வமைப்பின் ஊடாக பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யெல்ப் ஆகிய இணையத்தளங்களுடனும் தொடர்பு மேற்கொள்ள முடியும்.

கார்ப் பயணம் மேற்கொள்ளும்போது இவ் அப்ளிகேஷனின் ஊடாக டைப்செய்து ஸ்டேடஸ் அப்டேட்களை மேற்கொள்ளமுடியாது. எனினும் முன்னரே பதிவு செய்து வைத்திருந்த ஸ்டேடஸ்களை பேஸ்புக்கில் பதிந்துகொள்ளமுடியும்.

நாம் எங்கு பயணம் செய்யப் போகின்றோம் என்பதனை முன்னரே காரின் நெவிகேசன் சிஸ்டத்தில் பதிவு செய்து கொள்ளமுடியும். இதன் படி நமது பயணம் தொடர்பான தகவலையும் பேஸ்புக்கில் பதியமுடியும்.

மேலும் ஒவ்வொரு இடத்தினையும் நீங்கள் கடக்கும் போது அந்த இடத்தில் வசிக்கும் உங்களது பேஸ்புக் நண்பர்கள் தொடர்பாக அறியத்தருவதுடன், நாம் பேஸ்புக்கில் 'லைக்' செய்திருந்த வியாபார நிறுவனங்கள், விடுதிகள் தொடர்பாகவும் அறியத்தரும்.

இவை அனைத்தும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தினைக் கொண்டே செயற்படுகின்றன.

மெர்சடிஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்படி அப்ளிகேஷன்களுக்கு அப்டேட்களையும் வழங்கவுள்ளது.

எந்தவொரு 3ஜி வலையமைப்பின் ஊடாகவும் பாவனையாளர்கள் இச் சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

கூடிய விரைவில் மற்றைய கார்தயாரிப்பு நிறுவனங்களும் இவ்வசதியை வழங்கத்தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இதனால் விபத்துக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரிக்குமென பல சமூக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பேஸ்புக் ஏற்கனவே நமது அன்றாட வாழ்வில் பல வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாகனங்களிலும் பேஸ்புக் பாவனை வரத்தொடங்கினால் ஓட்டுநர்களின் கவனம் அதில் திரும்புமெனவும் இதனால் விபத்துகள் ஏற்படுவது நிச்சயம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை கைவிடுவது சிறந்ததென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பேஸ்புக்குக்கும் பொருந்தாமலா போய்விடும்?

Tuesday, January 10, 2012

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்

Monday, January 9, 2012

2012 உலகம் அழிய வேண்டுமா..???

பதிவுக்கு போறதுக்கு முண்ணாடி எல்லோருக்கும் ஒன்னு சொல்லியே ஆகனும், அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2011 முடிஞ்சு 2012 ஆரம்பிச்சாச்சு...சில பேருக்கு “ஜஸ்ட அனதர் டே” (Just another Day), அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். பல பேருக்கு “போனது எல்லாம் போகட்டும், இனி மேல புதுசா ஒரு இன்னிங்க்ஸ் தொடங்குவோம்” அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். எண்ணங்கள் எப்படியோ,  எல்லோருக்கும் இந்த ஆண்டு வெற்றிகரமாய் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். அப்புறம் வர போற 2012  ஹாலிவுட்காரன்க்கு ரொம்ப ஸ்பெஷலான மற்றும் பிடிச்ச ஆண்டு. ஏன்னா இந்த நம்பரை வச்சு ஏற்கனவே அவனுக நல்லா காசு பார்துட்டானுக.2009 ஆண்டு Roland Emmerich எடுத்த திரைகாவியம் தான் 2012. இங்க எப்படி பேரரசும், விஜய டி.ஆர் -ம் தமிழில் யார் என்ன மாதிரி உலக சினிமா எடுத்தாலும், தங்களோட ஸ்டைலில் கொஞ்சம் கூட காம்பிரமிஸ் பண்ணிக்காம அவங்களுக்கு பிடிச்ச !!! ஸ்டைல்ல படம் எடுத்து தள்ளுறாங்கலோ, அதே போல ஒரு ஹாலிவுட் டைரக்டர் தான் Roland Emmerich. இவரு எடுக்குற படம் எல்லாம் “அழிவு, பேரழிவு, ரொம்ப ரொம்ப பேரழிவு “அப்படிங்கிற முனு பிரிவுல போட்டுறலாம். இந்த படத்தை நான் மூனாவது பிரிவுல “ரொம்ப ரொம்ப பேரழிவு” சேர்கிறேன்.
ந்த படத்துல (2012) அவரு எடுத்த கான்செப்ட் வழக்கம் போல உலக அழிவு தான், அதுவும் கரெக்டா 2012 ஆம் ஆண்டு உலகம் அழிய போறதா 2009 ஆம் வருஷம் இந்த படத்தை எடுத்தார். கான்செப்ட் என்னனா மாயன் நாகரிகம் கணக்கு படி அவங்க காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் முடியுது. அதுவும் கரெக்டா 2012 டிசம்பர்-21 ஆம் தேதி முடியுது. சரி அவங்க காலண்டர் முடிஞ்சா புது காலண்டர் வாங்கி குடுக்க வேண்டியதுதானே, அத விட்டுட்டு “மாயன் காலண்டர்” முடிஞ்சா உலகமே அழிய போகுது அப்பிடின்னு கொலைவெறி பதியை கிளப்பி விட்டாங்க சில அறிவு ஜீவிகள். அதையே Roland கெட்டியா பிடிச்சுகிட்டு எடுத்த படம் தான் 2012. 
ஏற்கனவே இதே மாதிரி “1999” ஆம் ஆண்டு முடிஞ்சு 2000 வருஷம் ஆரம்பத்தில் உலகம் அழிய போறதா நாஸ்ட்ரடாமஸ் கணிச்சசாருன்னு ஒரு புரளி வந்திச்சு. நாஸ்ட்ரடாமஸ் பெரிய அப்பாடக்கர், அவரு கனிச்சா கரெக்டா இருக்கும், அப்பிடின்னு பெரிய பில்ட் அப் எல்லாம் குடுத்தாங்க. ஆனா 1999 முடிஞ்சு 13 வருஷம் ஆச்சு. அதுக்கு ஏத்த மாதிரி “Y2K” பிரச்சனை வேற சொன்னாங்க. ஆரம்பம் (உலகம்) அப்படின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா முடிவுன்னு ஒன்னு இருக்கும். ஆனா ஆரம்பமே (உலகம்) எப்படி உருவானது அப்படின்னு நமக்கு சரியா தெரியாதப்ப முடிவை பத்தி யோசிக்கிறது முட்டாள்தனமானது. சரி உலக அழிவ விடுங்க, ரொம்ப சீரியஸ்ஸ போயிட்டோம். நம்ப அடுத்து க்வென்டின் 2014 –ல எடுக்க போற “Kill Bill –Vol-3” படத்துல யாரு யார பழி வாங்குவாங்க அப்படின்னு கவலை படுவோம். இல்லாட்டி நோலன் “The Dark Knight Rises”- க்கு அப்புறம் என்ன படம் எடுப்பாருன்னு யோசிப்போம். ஐயோ..  எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்...... இப்போ 2012 படத்தை பத்தி பார்போம்.. 


கதை சுருக்கம்:

கதை 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமெரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது. இப்படி உலக அழியிர கதையில ஒரே ஒரு அமெரிக்க குடும்பம் மட்டும் தப்பிக்க நடத்தும் போராட்டம் தான் படமே. அந்த குடும்பம் அக்மார்க் அமெரிக்க குடும்பத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் நிறைந்த ஒரு பல்கலைக்கழகம். எப்படினா அந்த குடும்ப தலைவி வேற ஒருத்தன் கூட வாழ்ந்து கொண்டிருப்பாள். அந்த குடும்பத்துல்ல ரெண்டு குழந்தைகள், ஒரு பையன், பொண்ணு. அந்த பையனுக்கும் அவனோட அப்பாவான ஹீரோவுக்கும் நல்ல ரீலேசன்ஷிப் இருக்காது. கடைசியில அந்த குடும்பம் உலக அழிவுல எப்படி தப்பிச்சு அப்பிடிங்கிரத Roland தன்னோட பணியில பதில் சொல்லி இருப்பார்.


பட துளிகள்:

படத்தோட கதை படு மொக்கையா இருந்தாலும், கிராபிக்ஸ் கலக்கலா இருக்கும். சுனாமி, பூகம்பம், எரிமலை எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல பார்க்க விஷுவல் ட்ரீட்.

அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் மக்களுக்காக !!! தன் உயிரை தியாகம் செய்யும் காட்சி நல்லா இருக்கும்.

டிஸ்கி:

நீங்க படத்தை பார்திருந்தா ஓகே. பாக்காட்டி சின்ன அட்வைஸ். ரொம்ப கடுப்பா இருந்தா இந்த படத்தை பார்க்காதேங்க, இன்னும் ரொம்ப கடுப்பு ஆகிருவேங்க. சும்மா ரிலாக்ஸ்ஸா இருக்கும் போது பாருங்க.. நல்ல BR Rip ப்ரின்ட்ல பாருங்க...

இந்த படத்துக்கு அப்புறம் Roland இனிமேல் அழிவு படமே எடுக்க மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணி இருக்கிறார்.

Sunday, January 8, 2012

நண்பன் சென்சார் வோட் தகவல்


நண்பன் படம் 2011ம் ஆண்டு விருது வழங்கும் படங்களுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் இப்படம் 2011ம் ஆண்டு சென்சார் நிறுவனத்தால் u செர்டிபிகாடே வழங்கப்பட்டுள்ளது அனைவரும் பார்க்க கூடிய படமாக வந்துள்ளது என சென்சார் நிறுவனமும் பாராட்டியுள்ளது.
இப்படம் பொங்கல் வெளியீடாக ஜெனவரி 12 வெளிவர உள்ளது.

முக புத்தகத்திற்கான குறுக்கு வழிகள்!

நீங்கள் விசைப் பலகையை பெரும்பாலும் பயன்படுத்துபவா் எனில், விசைப் பலகை குறுக்கு வழிகளை தெரிந்து வைத்திருத்தல் நல்லது. இந்தப் பதிவில் முகப் புத்தகத்தில் பயன்படுத்தக் கூடிய குறுக்கு வழிகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் குரோம் இ.உலாவி பயன்படுத்துபவா் எனில்,
Alt உடன் கீழ்க்காணும் குறுக்கு வழிகளை பயன்படுத்தலாம். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
1 – home
2 – timeline/profile
3 – friends
4 – messages
5 – notifications
6 – general account settings
7 – privacy settings 
8 – முகப் புத்தகத்தின் facebook page
9 – legal terms
0 – help center
m – new messages
? – search
நெருப்பு நரி இ.உலாவி எனில், Shift + Alt உடன் மேற்காணும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துங்கள். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
இன்ரநெட் எஸ்புளோரா் 9 எனில், சில குறுக்கு வழிகள் மாத்திரமே செயற்படுகின்றன.(Alt+#,Enter)
Mac இயங்கு தளம் எனில்,
  • குரோம் – Control+Option+#
  • நெருப்பு நரி  - Control + #
  • சபாரி - Control+#
பிறகென்ன விசைப் பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி அசத்துங்கள்.

அறியாத சில விசயங்கள் பகுதி-1

அறியாத சில விசயங்கள் பகுதி-1

O இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

O வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

O வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

O உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

O வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

O கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

O கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

O ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

O நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

O கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

0 கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

O முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.


O ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

O ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

O உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

O வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

O வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது
தொடரும்...