Tuesday, January 24, 2012

தில்ஷான் ராஜினாமா; புதிய தலைவர் மஹேல....!



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் குமார் சங்கக்கார ராஜினாமா செய்ததையடுத்து திலகரட்ன தில்ஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 
எனினும்  இலங்கை அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடன் தோல்விகளைத் தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் துறை முற்றாக மறுசீரமைக்ப்படவுள்ளதாக செய்திகள்வெளியாகியிருந்தன.
அண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா செய்ததையடுத்து மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் தொடர்ந்தும் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
34 வயதான மஹேல ஜயவர்தன,  ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.  
அவர் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பக்கபடுகிறது.
 

No comments:

Post a Comment