Sunday, January 22, 2017

விண்வெளி ஆய்வு மையம் (ISS - Internatioanl Space Station)

வானில் மிகவும் பிரகாசமான பொருட்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது தான் இந்த விண்வெளி ஆய்வு மையம் (ISS - Internatioanl Space Station).

இன்று பி.ப. 6.39 மணியளவில் இது இலங்கையை ஊடுருத்து சென்றது. ISS ,Tiangong 1,Tiangong 2 ஆகிய மூன்று Space Station களில் ISS தான் மிக பெரியது இது அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான்,கனடா, ஐரோப்பிய ஒன்றிய(22 நாடுகள்) நாடுகளின் கூட்டு முயற்சியாகும். இது நாசாவுக்கும் அமெரிகவுக்கும் தனியே சொந்தமானது இல்லை.

இது 72m நீளமும், 108m அகலமும், 20m உயரமும், 419,455 kg நிறையும் கொண்டது. ஆகவே, இது சாதாரண வெற்றுகண்ணனுக்கு தெளிவாக தெரியக்கூடியது. இது மணிக்கு சுமார் 27,600km வேகத்தில் பயணிக்கும் அதாவது இலங்கையை 29 செகண்ட்களில் குறுக்காக கடந்து செல்லும். தொலைநோக்கியில் பார்ப்பது பொருத்தமற்றது.
1998.11.20 விண்ணுக்கு ஏவப்பட்டு இதுவரை 101,081 தடவை பூமியை சுற்றி வந்துள்ளது. ஒரு நாளைக்கு 15.54 தடவை சுற்றும்.



இன்று இதை பார்க்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம்.. செப்டெம்பர் 27,28,29,30 தினங்களில் மீண்டும் தென்படும். இதை உங்களது பிரதேசத்தில் காண்பதற்கு https://spotthestation.nasa.gov/home.cfm என்ற இணையத்தில் மூலம் நேரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி விண்வெளியிலிருந்து நேரடியகாக பூமிய இந்த ISS மூலம் பார்க்கலாம்.. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இலங்கைக்கு நேராக வரும் சந்தர்பத்தில் LIVE ஆக பாருங்கள் அருமையாக இருக்கும்..!!

இதான் லிங்க்..
https://www.youtube.com/watch?v=Gy5PC5Auoak

இதுவும் ஒரு நேரடி ஒளிபரப்பு..

J. மபாஸ் தீன்

Friday, January 13, 2017

மபாஸ் தீனின் பயணக்குறிப்பிலிருந்து... பாகம் 01

Deduru Oya
பேரூந்து ஓட்டுனர்களுக்கு தனது திறமையைகாட்ட ஏதாவது ஓர் இடத்தில் சந்தர்பம் கிடைத்துவிடும். புத்தளம் - சிலாபம் வீதி இதற்கு அதிக ஒத்துழைப்பும் கொடுக்கின்றது.

A9 வீதியின் சகோதரன் என்றுகூட இந்த வீதியை கூறிவிடலாம் ஏனெனில் அத்தனை உயிர்களை காவுகொண்டும் அமைதியாக இருக்கிறது.
வீதியின் இரு ஓரங்களிலும் பசுமையான மரங்களை கொண்டு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிந்தாலும் வேகத்தை குறைக்கும் படி கூறும் பதாகைகளும் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின் எச்சமும் இது ஒரு உயிர்கவ்வும் கருவி என்பதை நிரூபித்து விடுகிறது..

50km தூரத்தை கொண்ட இவ்வீதியில் 50kmh வேகத்தில் செல்லுமாறு போக்குவரத்து அதிகார சபையால் பரிந்துரைக்கபாட்டாலும். 25 தொடக்கம் 35 நிமிடங்களில் கடந்து செல்கின்றனர். இதில் ஒரே இடத்திற்கு செல்லும் வேற வேற பஸ்களை சந்தித்து கொண்டால் அவ்வளவுதான் யார் முதலில் செல்வது என்ற போட்டி.

மீசைகள் எல்லாரும் பாரதியாக முடியாதல்லவா.. 120kmh வேகத்தில் திறமையான ஓட்டுனர்கள் தப்பித்து கொள்ள மீதி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கிக்கொல்கின்றனர்.

அதிக மழை காலங்களில் தெதுறு ஓயா பெருக்கெடுத்து இவ்வீதி சுமார் 12km நீரில் மூழ்கிவிடும். ஏனைய வாகனங்கள் மட்டுப்படுத்தபட்டு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கபடும்.

பஸ்ஸில் நமது கால் நனையும் அளவு நீர் இருந்தாலும் வேற்றுபாதையில்லாமல் நிர்பந்திக்கப்படுகிறது. செல்லும் போது கடலில் செல்வது போன்ற அனுபவம் ஏற்பட்டாலும் பஸ் நிருத்தபட்டால் நாம் இறங்கி தள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் நாம் இறங்கினால் நீரின் வேகம் நம்மை இழுத்துக்கொண்டுசென்றுவிடும். நீரோட்டம் குறையமட்டும் அங்கேயே இருக்கவேண்டும்.