படம் : நான் ஈ
நடிப்பு : கிச்சா சுதீப் , சமந்தா , நானி , சந்தானம்
இயக்கம் : ராஜமௌலி ,
கதைச்சுருக்கம் : வில்லனால் சாகடிக்கபடும் ஹீரோ 'ஈ'யாக மறுபிறவி எடுத்து வில்லனை பழிதீர்க்கும் கதைதான் " நான் ஈ"
குழந்தை தன் அப்பாவிடம் கதை கேட்கும் முதல் நிமிடத்தில் இருந்தே படத்துடன் பிரயாணிக்க வைக்கிறார் இயக்குனர். முதல் 20 நிமிடங்களே வந்தாலும் 'நானி' ரசிக்க வைக்கிறார்.சமந்தா, நானி இடைப்பட்ட காதல் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன.
படத்தின் முதல் ஹீரோ கிராபிக்ஸ் , இரண்டாம் ஹீரோ சுதீப் . கண்களை உறுத்த கிராபிக்ஸ்-உம், சுதீப்-இன் மிரட்டலான நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. கிரேசி மோகன்-இன் வசனங்கள் மிகப்பெரிய பிளஸ்.
ஹீரோ ஈயாக மாறியபிறகு திரைக்கதை சூடு பிடிக்கின்றது. தூங்க முடியாமல் தவிப்பது, கையில் ஈ-யை கொல்லும் ஹிட்-உடன் அலைவது, காற்று கூட புக முடியாத அளவுக்கு வீட்டை மாற்றியமைப்பது என சுதீப்-இன் அட்டகாசத்தால் தியேட்டரில் சிரிப்பலை.
இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் அது படத்தை பெரிதளவில் பாதிக்கவில்லை . "நுண்சிலை செய்திடும் பொன் சிலையே , பென்சிலை சீவிடும் பெண் சிலையே" என கார்கி-இன் வரிகள் பிரமாதம். பாடல்கள் ஒகே. இரண்டே காட்சிகளில் வந்தாலும் சந்தானம் காமெடி சூப்பர். கிளைமாக்ஸ் டிபிகல் ஆந்திரா காரம் .
மொத்தத்தில் " நான் ஈ " ராஜமௌலி-இன் இன்னொரு பக்கா கம்மர்சியல் என்டர்டைனர் .